என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
லைவ் அப்டேட்ஸ்- அடுத்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ந்தேதி நடைபெறும் என அறிவிப்பு
- ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
- அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் குவிந்ததால் வானகரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் உண்டானது.
Live Updates
- 23 Jun 2022 12:20 PM IST
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழுவில் வெள்ளி கிரீடம், வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.
- 23 Jun 2022 12:20 PM IST
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழுவில் வெள்ளி கிரீடம், வீரவைள் பரிசாக வழங்கப்பட்டது.
- 23 Jun 2022 12:10 PM IST
பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- 23 Jun 2022 12:08 PM IST
அடுத்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ந்தேதி நடைபெறும் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார்.
- 23 Jun 2022 11:45 AM IST
அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருந்த அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அறிவிப்பு.
- 23 Jun 2022 11:40 AM IST
கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
- 23 Jun 2022 11:38 AM IST
உச்சக்கட்ட பரபரப்பில் அ.தி.மு.க.பொதுக்குழு கூட்டம் கூடியது
Next Story









