உள்ளூர் செய்திகள்

மைத்துனரை கொன்ற டிரைவருக்கு ஆயுள்

Published On 2023-01-25 15:10 IST   |   Update On 2023-01-25 15:10:00 IST
  • கைப்பந்து விளையாடும் போது தகராறு ஏற்பட்டுள்ளது.
  • சாட்சிகளை மறைக்க முயன்ற குற்றத்திற்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

மத்தூர், ஜன.25-

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த மாடரஅள்ளி அண்ணா நகரை சேர்ந்தவர் வல்லரசு (வயது 18). கூலித்தொழிலாளி.

இவரது அக்கா கணவர் வெங்கடேசன் (32). கார் டிரைவர். இவர்கள் இருவருக்கும் கடந்த 21.12.2018 அன்று மாடரஅள்ளி அருகே கைப்பந்து விளையாடும் போது தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த வெங்கடேசன், வல்லரசை கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த வல்லரசு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த 25.12.2018 அன்று இறந்தார்.

இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி வெங்கடேசனை மத்தூர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இ்ந்த வழக்கு முடிவடைந்து நேற்று நீதிபதி தாமோதரன் தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட வெங்கடேசனுக்கு ஆயுள் தண்டனை, சாட்சிகளை மறைக்க முயன்ற குற்றத்திற்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் குமரவேல் ஆஜரானார்.

Tags:    

Similar News