உள்ளூர் செய்திகள்

சட்டவிழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டத்தில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர ஷ்ரவன் குமார் வழங்கினார். அருகில் மாவட்ட முதன்மை நீதிபதி கீதாராணி மற்றும் பலர் உள்ளனர். 

கள்ளக்குறிச்சியில் சட்ட விழிப்புணர்வு ஆலோசனைகூட்டம்: தேசிய மக்கள் நீதிமன்ற மூலம் வழக்குகளுக்கு தீர்வு-முதன்மை நீதிபதி கீதாராணி

Published On 2022-08-27 10:02 GMT   |   Update On 2022-08-27 10:02 GMT
  • கூடுதல் மாவட்ட முதன்மை நீதிபதி கீதாராணி தலைமை தாங்கினார்.
  • சட்டப்பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கிடவும் இந்த குழு செயல்படுகிறது.

 கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டவி ழிப்புணர்வு ஆலோசனைக் குழு தொடர்பாக மாவட்ட அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டகலெக்டர் ஷ்ரவன் குமார்முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)சுரேஷ் வரவேற்றார். கூடுதல் மாவட்ட முதன்மை நீதிபதி கீதாராணி தலைமை தாங்கி பேசியதாவது:- நலிவடைந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்கிடவும், பொதுமக்களு க்கிடையேயான பிரச்ச னைகளை மக்கள் நீதிமன்றம் மூலமாக தீர்த்துக்கொள்ள வழிகாட்டுவதற்காகவும், வழக்கறிஞர்கள் இலவசமாக வழக்குகளை நடத்திடவும், சட்டப்பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கிடவும் இந்த குழு செயல்படுகிறது. மேலும் பொதுமக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு தங்கள்வழக்குகளை சமரசம் மற்றும் சுமூக முறையில் விரைவில் தீர்வு காண்பதற்காக தேசிய மக்கள் நீதிமன்றம் எற்படுத்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாகவும், தங்கள் வழக்குகளை சுமூக முறையில்தீ ர்த்துக்கொள்ளலாம்.

எவ்வித சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட உதவி தேவைப்பட்டால் மாவட்டசட்டப்பணிகள் ஆணைக்குழு வாயிலாக தொடர்பு கொண்டு தீர்வு காணலாம். மேலும் கூடுதல் விபரங்கள் அறிய மாவட்ட சட்டப்பணிகள் ஆணை க்குழு விழு ப்புரம் 04146-228000, கள்ளக்குறிச்சி வட்டசட்டப்பணிகள் குழு 04151-226730, உளுந்தூர்பேட்டை சட்டப்ப ணிகள்குழு 04149-220433, திருக்கோவிலூர் வட்ட சட்டப்பணிகள் குழு 04153-253970 மற்றும் சங்கராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு04151-235033 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாண்பமை முதன்மை சார்பு வீரணன், உதவி ஆணையர் (கலால்) இராஜவேல், வேளாண்மை இணைஇயக்குநர் வேல்விழி, துணை இயக்குநர் சுகாதா ரப்பணிகள் இராஜா மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.முடிவில் மாவட்ட சட்ட ப்பணிகள் ஆணை க்குழு செயலர் விஜயகுமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News