உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
வேடசந்தூர் அருகே சரக்கு வாகனம் மோதி பெண் பலி
- சரக்கு வாகனம் பைக் மீது பயங்கரமாக மோதியதில் பெண் பரிதாபமாக பலியானார்.
- வேடசந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூரை சேர்ந்தவர் மயில்சாமி மனைவி சாமியாத்தாள்(55). இவர் தனது உறவினர் சந்திரசேகர்(34) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேடசந்தூரில் இருந்து பூதிப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல்-கரூர் 4 வழிச்சாலையில் அய்யர்மடம் அருகே சாலையில் இருந்து திரும்ப முயன்ற போது பின்னால் வந்த சரக்கு வாகனம் பைக் மீது பயங்கரமாக மோதியது.
இதில் பின்னால் அமர்ந்திருந்த சாமியாத்தாள் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த சந்திரசேகர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.