உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல் அருகே தீ விபத்தில் இளம்பெண் பலி

Published On 2022-07-22 11:25 IST   |   Update On 2022-07-22 11:25:00 IST
  • இரவு வீட்டில் விளக்கு எரியவைக்கும் போது எதிர்பாராத விதமாக இளம்பெண் உடலில் தீப்பிடித்தது.
  • பலத்த தீக்காயங்குளுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ப்பட்ட இளம்பெண் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகில் உள்ள அதிகாரிபட்டி ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி கவிதா (வயது28). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

செல்வராஜ் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சொத்து பிரச்சினை காரணமாக வெட்டி படுகொலை செய்யப்ப ட்டார். கவிதா கூலி வேலை பார்த்து தனது குந்தைகளை வளர்த்து வந்தார். நேற்று இரவு வீட்டில் விளக்கு எரியவைக்கும் போது எதிர்பாராத விதமாக உடலில் தீப்பிடித்தது.

பலத்த தீக்காயங்குளுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ப்பட்ட கவிதா அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சாணார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News