உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
நிலக்கோட்டை அருகே இளம்பெண் தற்கொலை
- நிலக்கோட்டை அருகே நோய் கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொணடார்
- இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள கொக்குபட்டியை சேர்ந்த செல்லமணி மகள் வீரசின்னம்மாள் (வயது 24). வீரசின்னம்மாளுக்கு கர்ப்பப்பை கோளாறு காரணமாக அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது.
இதனால் மனவேதனை அடைந்த வீரசின்னம்மாள் வீட்டில் யாரும் இல்லாத போது சேலையில் தூக்குப் போட்டுக் கொண்டார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.