மர்மமான முறையில் கூலித்தொழிலாளி சாவு
- ஆஞ்சநேயர் கோவில் அருகே பழைய கட்டிடத்தில் பிணமாக கிடப்பதாக தகவல் தெரிவித்தார்.
- முனுசாமி அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்ததாக முதற்கட்டவிசாரணையில் தெரியவந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மாங்கரையை அடுத்த வண்ணாத்திப்பட்டியைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 35). கட்டிட கூலித்தொழிலாளியான இவர் பெங்களூரு–வில் கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி முனியம்மாள். தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முனியம்மாள் செல்போனில் அதே பகுதி–யில் உள்ள நாத்து பண்ணை வைத்திருக்கும் காளியப்பன் என்பவர் தொடர்பு கொண்டு உனது கணவர் முனுசாமி தருமபுரி-பென்னாகரம் சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே பழைய கட்டிடத்தில் பிணமாக கிடப்பதாக தகவல் தெரிவித்தார்.
உடனே முனியம்மாள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அங்கு அவரது கணவர் பிண–மாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். முனுசாமியின் உடலை பார்த்து முனியம்மாள் கதறி அழுதார்.
இந்த சம்பவம் குறித்து முனியம்மாள் பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்ததில், முனுசாமி அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்ததாக முதற்கட்டவிசாரணையில் தெரியவந்தது. பின்னர் போலீசார் முனுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத–னைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவ–மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முனுசாமியை யாரா வது கொலை செய்து விட்டு உடலை வீசி சென்றனரா? அல்லது குடும்ப தகராறு காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்க–ளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.