கோப்பு படம்
கூலித் தொழிலாளி கொலையில் திருப்பம் மதுவில் தண்ணீர் கலந்து கொடுத்ததால் தீர்த்துகட்டிய கொடூரம் தோட்ட உரிமையாளரிடம் விசாரணை
- தோட்டத்து வீட்டில் தங்கி இருந்த தொழிலாளி நேற்று முன்தினம் இரவு படுகாயங்க ளுடன் இறந்து கிடந்தார்.
- போலீசார் விசாரணையில் ஓசிக்கு மதுபானம் தராத ஆத்திரத்தில் நடந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா வேலன் கவுண்டன்பட்டியைச் சேர்ந்த முத்து மகன் செல்வம் (வயது 45). இவர் திருமணம் ஆகி மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
நிலக்கோட்டை அருகே உள்ள சங்கராபுரம் பகுதி யில் கூலிவேலை பார்த்து அதே பகுதியைச் சேர்ந்த முத்தப்பன் (65) என்பவரது தோட்டத்து வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு செல்வம் படுகாயங்க ளுடன் இறந்து கிடந்தார்.
வீட்டுக்குள் முத்தப்பனும் வெட்டுக்காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்தார். இது குறித்து நிலக்கோட்டை போலீ சாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. போலீசார் செல்வ த்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த முத்தப்பன் நிலக்கோட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீ சார் விசாரணையில் ஓசிக்கு மது தராத ஆத்திரத்தில் செல்வம் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், செல்வம் தினமும் வேலைக்கு சென்று விட்டு இரவில் மது குடிப்பது வழக்கம். அப்போது தோட்ட உரிமையாளரான முத்தப்பன் தனக்கும் சிறிது மது தருமாறு கேட்டு வந்துள்ளார். செல்வம் அவ்வப்போது கொடுத்து வந்தாலும் சில சமயங்களில் மது கொடுக்க முடியவில்லை. இதனால் பாட்டிலில் சிறிது மது ஊற்றி அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து முத்தப்ப னுக்கு கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முத்தப்பன் என்னையே ஏமாற்று கிறாயா? என தகராறு செய்து வந்துள்ளார். அடிக்கடி மதுபானம் தராத சமயங்களில் எல்லாம் இது போன்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவத்தன்றும் தனக்கு மதுபானம் தராமல் செல்வம் மட்டும் குடித்துக் கொண்டி ருப்பதை பார்த்த முத்தப்பன் அரிவாளால் பின் தலையில் தாக்கினார்.
இதனை சற்றும் எதிர்பாராத செல்வம் முத்தப்பனை தாக்கினார். ஆனால் அதற்குள் செல்வம் மயங்கி விழுந்து உயிரிழந்தார். காயமடைந்த முத்தப்பன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர். ஓசிக்கு மதுபானம் தராத ஆத்திரத்தில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பபை ஏற்படுத்தி யுள்ளது.