உள்ளூர் செய்திகள்
- மனைவி மரகதம் ஏன் தினமும் குடித்துவிட்டு வருகிறாய் என கேட்டுள்ளார்.
- ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சேகர் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே உள்ள கொட்டவூர் பகுதியை சேர்ந்த வர் சேகர்(வயது45) கூலி தொழிலாளி, இவருக்கு குடிபழக்கத்திற்கு அடிமையானவர், இந்த நிலையில் இவரது மனைவி மரகதம் ஏன் தினமும் குடித்துவிட்டு வருகிறாய் என கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சேகர் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மகாராஜகடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.