உள்ளூர் செய்திகள்
- எதிரே வந்த ஆட்டோ ஒன்று சங்கர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.
- அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பாலேபள்ளியைச் சேர்ந்தவர் வெங்கடப்பா. இவரது மகன் சங்கரப்பா என்கிற சங்கர் (வயது 28). கூலித்தொழிலாளியான இவர் அன்னியாம்-பாலேபள்ளி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று சங்கர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சங்கர் படுகாயம் அடைந்தார்.
உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.