உள்ளூர் செய்திகள்

விபத்தில் பலியான ராஜ்குமார்.

திண்டுக்கல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

Published On 2023-11-11 10:01 IST   |   Update On 2023-11-11 10:01:00 IST
  • தொழிலாளி ராமையன்பட்டி பிரிவு அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் உடல் நசுங்கிய நிலையில் இறந்துகிடந்தார்.
  • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்:

சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த கருப்பன் மகன் ராஜ்குமார்(45). இவர் நெல்கதிர் அறுக்கும் எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். நேற்று இரவு பழனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் ராமையன்பட்டி பிரிவு அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் உடல் நசுங்கிய நிலையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News