உள்ளூர் செய்திகள்

சங்ககிரியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்ற காட்சி. 

சங்ககிரியில் குருத்தோலை பவனி

Published On 2023-04-03 14:50 IST   |   Update On 2023-04-03 14:50:00 IST
  • கிறிஸ்தவர்களின் புனித பண்டிகையான குருத்தோலை ஞாயிறு நேற்று கொண்டாடப்பட்டது.
  • சங்ககிரி ஐக்கிய சபைகளின் போதகர்கள் தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது.

சங்ககிரி:

சேலம் மாவட்டம் சங்ககிரியில் கிறிஸ்தவர்களின் புனித பண்டிகையான குருத்தோலை ஞாயிறு நேற்று கொண்டாடப்பட்டது.

சங்ககிரி ஐக்கிய சபைகளின் போதகர்கள் தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது. இதில், புனித அந்தோணியார் பேராலயத்தில் இருந்து கிறிஸ்தவர்கள் ஏரா ளமானோர் குருத்தோலைகளை கையில் ஏந்தி, புதிய எடப்பாடி சாலை, பவானி மெயின் ரோடு வழியாக பழைய எடப்பாடி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயம் வரை ஊர்வலமாகச் சென்றனர். தொடர்ந்து அனைவரும் பிராத்தனை செய்தனர்.   

Tags:    

Similar News