உள்ளூர் செய்திகள்

பாப்பாரப்பட்டி பகுதியில் யானைகளை பிடிக்க கும்கி யானை வருகை

Published On 2023-02-03 09:42 GMT   |   Update On 2023-02-03 09:42 GMT
  • இரண்டு காட்டு யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்தி வந்தன.
  • கும்கி யானை மற்றும் யானையை விரட்டும் சிறப்பு படையினர் பாப்பாரப்பட்டி பகுதிக்கு வந்துள்ளனர்.

பாப்பாரப்பட்டி, 

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் கடந்த நான்கு மாத காலமாக இரண்டு காட்டு யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்தி வந்தன.

காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்து றையினர் மெத்தனமாக உள்ளதாக ஊராட்சி மன்ற தலைவருக்கும், வனத்துறையினருக்கும் தகராறு ஏற்பட்டு ஏற்கனவே வழக்கும் பதியப்பட்டுள்ளது.

யானைகளை காட்டுக்குள் விரட்டாததை கண்டித்து விவசாயிகள் சார்பில் போராட்டமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உரிய உத்தரவு பெறப்பட்டு பொள்ளாச்சியில் இருந்து கும்கி யானை மற்றும் யானையை விரட்டும் சிறப்பு படையினர் பாப்பாரப்பட்டி பகுதிக்கு வந்துள்ளனர்.

அவர்கள் அப்பகுதியில் சுற்றி திரியும் காட்டு யானைகளின் நகர்வுகளை கண்காணித்து வருகின்றனர் .யானை பிடிபட்டவுடன் உயிரியல் பூங்காவில் கொண்டு சேர்க்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News