உள்ளூர் செய்திகள்

கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம்

Published On 2023-05-23 08:09 GMT   |   Update On 2023-05-23 08:09 GMT
  • திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளது.
  • 11 பரிவார மூர்த்தி சன்னதிகளுக்கு தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது.

பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதனை அடுத்து திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளது.

இதனிடையே கோவிலில் உள்ள பரிவார மூர்த்தி தெய்வ சன்னதிக ளுக்கு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

ஆபத்து காத்த விநாயகர், சம்ஹார வேலர், அஷ்ட பைரவர், ருணம் தீர்த்த விநாயகர், காழிபுரீஸ்வரர், காழி கணநாதர், மண்டப குமாரர், 63 நாயன்மார்கள், நவக்கிரக சன்னதி, திருஞானசம்பந்தர் ஆர்ச் உள்ளிட்ட சுமார் 11 பரிவார மூர்த்தி சன்னதிக ளுக்கு தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சா ரியார் சுவாமிகள் முன்னிலையில் கும்பாபி ஷேகம் நடைபெற்றது.

இதில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் சங்க தலைவர் மார்கோனி, துணைத் தலைவர் கோவி.நடராஜன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், திருமுல்லைவாசல் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News