உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேக பணிகளை ராஜா எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் கும்பாபிஷேக பணிகள்- ராஜா எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2023-02-26 08:43 GMT   |   Update On 2023-02-26 08:43 GMT
  • சங்கரநாராயண சுவாமி கோவிலில் 2020-ல் நடக்க வேண்டிய கும்பாபிஷேகம் தள்ளிப்போனது.
  • கோவில் ராஜகோபுரம் சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

சங்கரன்கோவில்:

தென் பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2008-ம் ஆண்டு நடந்தது. அதனைத் தொடர்ந்து 2020-ல் நடக்க வேண்டிய கும்பாபிஷேகம் தள்ளிப் போனது. இதனால் ராஜா எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கும்பாபிஷேகம் மற்றும் ஆயிரம் ஆண்டு விழா நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இதுகுறித்து அறநிலை யத்துறை சார்பில் சங்கரன் கோவில் கோவில் கும்பாபி ஷேகம் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அதனை தொடர்ந்து கும்பாபிஷேக பணிகளுக்காக கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் கடந்த 9-ந்தேதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சங்கரநாராயண சுவாமி கோவிலில் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து ரூ.7.50 கோடி செலவில் சங்கரநாராயண சுவாமி கோமதி அம்பாள் கோவிலில் செப்பணிட திருப்பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு குடமுழுக்கு 2023-ம் ஆண்டுக்குள் நடத்திடவும்,

மேலும் கோவிலின் ஆயிரமாவாது ஆண்டு விழாவும் நடத்தப்படும் என அறிவித்தார். மேலும் கும்பாபிஷேக பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் எனவும் அறநிலையத்துறை அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் தற்போது கோவில் விமானங்கள் ராஜகோபுரம் சீரமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் தொடங்கி உள்ளது. கும்பாபிஷேக பணிகளை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரிய துரை, நகர செயலாளர் பிரகாஷ், மாணவரணி கார்த்தி மற்றும் தி.மு.க.வை சேர்ந்த குமாஸ்தாமுருகன், வீராசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News