உள்ளூர் செய்திகள்

மாணவியை நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில் பாராட்டி பரிசு வழங்கிய போது எடுத்த படம்.

பாண்டமங்கலம் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு

Published On 2022-12-26 12:57 IST   |   Update On 2022-12-26 12:57:00 IST
  • நவீன ஓவிய போட்டியில் வட்டார மற்றும் மாவட்ட அளவில் முதல் பரிசை பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.
  • தேர்வு பெற்ற மாணவியை நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில், தேசிய அளவிலான போட்டியிலும் பங்கு பெற வாழ்த்து தெரிவித்து நிதி உதவி வழங்கினார்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி யசாவதி, நவீன ஓவிய போட்டியில் வட்டார மற்றும் மாவட்ட அளவில் முதல் பரிசை பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.

தேர்வு பெற்ற மாணவியை நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில், தேசிய அளவிலான போட்டியிலும் பங்கு பெற வாழ்த்து தெரிவித்து நிதி உதவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொத்த னூர் பேரூராட்சித் தலை வரும், பேரூர் செயலா ளருமான கருணாநிதி, பாண்டமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவரும், பேரூர் செயலாளருமான முருகவேல், தங்கரை பேரூர் செயலாளர் ராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன் மற்றும் மாவட்ட ஒன்றிய தேர்வு கழக பொறுப்பாளர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News