உள்ளூர் செய்திகள்

இன்ஸ்பெக்டர் விஜயஅனிதாவுக்கு திருச்சி சுங்க ஆணையர் அணில் விருது வழங்கிய காட்சி.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடத்தல் குற்றங்களை தடுத்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு

Published On 2023-01-28 14:18 IST   |   Update On 2023-01-28 14:18:00 IST
  • போதை பொருட்களை இலங்கைக்கு கடத்த முயன்ற குற்றவாளிகளை இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா கைது செய்தார்.
  • திருச்சியில் நடைபெற்ற விழாவில் விஜய அனிதாவுக்கு விருது வழங்கப்பட்டது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி கடல் பிராந்திய பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சித்த பல கோடி மதிப்புள்ள போதை பொருட்கள், குற்றவாளிகளை கைது செய்து கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்பட்ட தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

திருச்சி சுங்க இலாகா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சர்வதேச சுங்க தின விழாவில் தூத்துக்குடி மாவட்ட குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் அனிதாவுக்கு திருச்சி சுங்க ஆணையர் அணில் விருது வழங்கி கவுரவித்து பாராட்டினார்.

Tags:    

Similar News