உள்ளூர் செய்திகள்

குடகனாறு அணை (கோப்பு படம்)

தொடர் மழையால் முழுகொள்ளளவை எட்டும் குடகனாறு அணை பாதுகாப்பு கருதி 400 கனஅடி திறப்பு

Published On 2022-10-22 09:52 IST   |   Update On 2022-10-22 09:52:00 IST
  • ஒரு வாரமாக வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால் குடகனாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.
  • இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 400 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.

வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியும், ஒருசில அணைகள் நிரம்பும் தருவாயிலும் உள்ளன.

வேடசந்தூர் வழியாக குடகனாற்றின் குறுக்கே அழகாபுரியில் 27 அடி உயரம் கொண்ட குடகனாறு அணை உள்ளது. இந்த அணையில் இருந்து கிளை வாய்க்கால்கள் மூலம் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் 9000 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

கடந்த ஒரு வாரமாக வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால் குடகனாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 22 அடியை எட்டியுள்ளது.

அணைக்கு 670 கனஅடி நீர் வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 400 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழை நீடித்து வருவதால் குடகனாறு அணையின் நீர்மட்டம் ஒரு சில நாட்களில் முழுகொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைதொடர்ந்து அரசு வழிகாட்டுதலின்படி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 35 மி.மீ மழை பதிவாகி உள்ளது. திண்டுக்கல் 4.7, பழனி 5, சத்திரபட்டி 9.2, நிலக்கோட்டை 8, நத்தம் 1, கொடைக்கானல் ரோஸ் கார்டன் 4.1, போட்கிளப் 2, மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News