நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டிமன்றம்
- கல்லூரியின் முதல்வர் .தனபால் தலைமை தாங்கினார்.
- 3-ம் ஆண்டு மாணவன் குணசேகரன் தொகுப்புரை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த தினத்தை முன்னிட்டு நூலக வாசகர் வட்டம் சார்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது .
விழாவில் கல்லூரியின் உயிர் தொழில்நுட்பவியல் துறை தலைவி கிருத்திகா வரவேற்புரையாற்றினார் . கல்லூரியின் முதல்வர் .தனபால் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.பட்டிமன்றத்திற்கு திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சுரேஷ் நடுவராக பங்கேற்றார்.
மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துவ தற்கான பேச்சு அணியில் தனசீலன் , லாவண்யா, தேஜா,சுஷ்மிதா ஆகியோர் பேசினர்.
அறிஞர் அண்ணாவின் எழுத்து அணியில் கல்லூரி யின் தமிழ்த்துறைத் தலை வர் சுரேஷ்குமார் , அன்பழ கன் , ஸ்வேதா ஜெயந்தி ஆகியோர் பேசினர்.
பட்டிமன்ற இறுதியில் நடுவர் சுரேஷ் பேரறிஞர் அண்ணா சாமானிய மக்களுக்கு மட்டுமல்லாமல் படித்த மக்களுக்கும் தன்னுடைய எழுத்துக்களால் முத்திரை பதித்தார். அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கொள்கைகளை அனைத்து மாணவ, மாணவிகளும் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.
பட்டிமன்ற நிகழ்விற்கு முன்னதாக தமிழ்த்துறை 3-ம் ஆண்டு மாணவன் குணசேகரன் தொகுப்புரை வழங்கினார். கல்லூரியின் கணினி அறிவியல் துறைத்தலைவி ராஜலட்சுமி நன்றி கூறினார்.