உள்ளூர் செய்திகள்

ஆலோசனைக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பேசிய போது எடுத்த படம்,

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எடப்பாடியை ஆதரித்து கூட்டம்

Published On 2022-06-30 14:40 IST   |   Update On 2022-06-30 14:40:00 IST
  • எடப்பாடி பழனிசாமி தான் ஒற்றைத் தலைமைக்கு தகுந்த நாயகர்.
  • தமிழகத்தில் மீண்டும்அ.தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும்,

ஓசூர்,

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், ஓசூரில் நடைபெற்றது. ஓசூர், பாகலூர் சாலையில், ஹட்கோ பகுதியில் உள்ள மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ.சி.வி.ராஜேந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட துணைசெயலாளர் மதன், பகுதி செயலாளர்கள் அசோகா, பி.ஆர்.வாசுதேவன், ராஜி, மஞ்சுநாத் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அ.தி.மு.க.விற்கு ஒற்றை தலைமைதான் வேண்டும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் கட்சி செயல்பட வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதில், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ராமு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சீனிவாசன், மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் மாநகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

பின்னர், நிருபர்களுக்கு பேட்டியளித்த பாலகிருஷ்ணரெட்டி,அ.தி.மு.க.தொண்டர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தான் ஒற்றைத் தலைமைக்கு தகுந்த நாயகர் என்றும் முடிவு செய்துள்ளனர். பொதுமக்களும் இதனையே விரும்புகின்றனர். ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க சிறப்பான ஆட்சியை தந்துள்ளது, தமிழகத்தில் மீண்டும்அ.தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும், அதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றைத் தலைமை அமையவேண்டும் என்றும் பொதுமக்கள் விரும்புகின்றனர்.

அந்தவகையில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில், கட்சியின் ஒற்றைத் தலைமை சாமானிய நாயகர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Similar News