உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி, பள்ளி மாணவிகளுக்குரூ.84 ஆயிரம் மதிப்பிலான இனிப்புகள் வழங்கல்

Published On 2023-01-07 15:55 IST   |   Update On 2023-01-07 15:55:00 IST
  • இனிப்புகளை (கேக்) வழங்கி, தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் தெரிவித்து கொண்டார்.
  • விளையாட்டுத்துறையில் வெற்றி பெற்று சாதனை புரிந்த மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி தனது பாராட்டுகளை தெரிவித்தார்

கிருஷ்ணகிரி,

மகளிர் முன்னேற்றத்தில் வெற்றி கண்டுள்ள ஐ.வி.டி.பியானது கடந்த பல ஆண்டுகளாக சிறப்பான கல்விச் சேவையை ஆற்றி வருவது அனைவரும் அறிந்த ஒன்று.

கல்வி ஊக்கப்பரிசுகள், பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்லூரிக் கல்வி பயில உதவித்தொகை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தேவையான பொருள்கள் வழங்குவது, ஆய்வகங்கள் மற்றும் நூலகங்கள் அமைக்க உதவி புரிவது மற்றும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளை ஐ.வி.டி.பி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 06.01.2023 அன்று புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 2100 மாணவிகளுக்கு தலா ரூ.40- என மொத்தம் ரூ.84 ஆயிரம் மதிப்பிலான இனிப்புகளை (கேக்) வழங்கி, தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் தெரிவித்து கொண்டார்.

இதில் பள்ளியின் தாளாளர் அமலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் தேசிய அளவிலும், மாநில அளவிலும் விளையாட்டுத்துறையில் வெற்றி பெற்று சாதனை புரிந்த மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

மேலும் இப்பள்ளியின் கல்வி வளர்ச்சிக்காக ஐ.வி.டி.பி நிறுவனம் இதுவரை ரூ.42.87 லட்சம் வழங்கி உள்ளதாகத் தெரிவித்தார். இந்நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாணவியர் மற்றும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News