உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட இளைஞர்களுக்கு பாராட்டு

Published On 2023-08-02 15:26 IST   |   Update On 2023-08-02 15:26:00 IST
  • 29-ந் தேதி காலை நடந்த பட்டாசு குடோன் வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
  • தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் உயிருக்கு போராடிக்கொண்டி ருந்தவர்களை மீட்டு உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த இளைஞர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அடுத்த பழையப்பேட்டையில் கடந்த 29-ந் தேதி காலை நடந்த பட்டாசு குடோன் வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதில் 12 பேர் படுகாயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் விபத்து ஏற்படும் போது பழையப்பேட்டை சேர்ந்த பாபுலால், அஸ்ரப், காதர், வஜீர், அஸ்மத், விஷ்ணு, சுஹேல், ரப்பீக், அனஸ் உள்ளிட்ட இளைஞர்கள் வெடி விபத்து நடந்து கொண்டிருந்த போதே தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெடி விபத்தில் சிக்கியவர்களை இளைஞர்கள் மீட்கும் காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவியது. அந்த இளைஞர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்ட மிலாதுநபி விழாக்குழு சார்பில் நடந்த இந்த விழாவில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் உயிருக்கு போராடிக்கொண்டி ருந்தவர்களை மீட்டு உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த இளைஞர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். இதில் கிருஷ்ணகிரி புதுப்பேட்டை மிலாது நபி விழாக்குழு தலைவர் அஸ்லம், செயலாளர் கராமத், சுகுமார், ஜெயக்குமார், சந்தோஷ்,பிரதோஸ்கான், மதன்ராஜ், செந்தில், ரியாஸ், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News