உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு கூடுதல் போலியோ தடுப்பூசி செலுத்தப்பட்ட போது எடுத்த படம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கூடுதல் போலியோ தடுப்பூசி திட்டம் தொடக்கம்

Published On 2023-01-05 10:27 GMT   |   Update On 2023-01-05 10:27 GMT
  • குழந்தைகளுக்கு போலியோ பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும்.
  • செவிலியர் அடங்கிய மருத்துவ குழுவினர் அனுப்பபட்டு போலியோ தடுப்பூசி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

குழந்தைகளுக்கு போலியோ பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும். பிறந்த குழந்தைகளுக்கு இரு தவணைகளாக, ஆறாவது வாரத்திலும், 14-வது வாரத்திலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

இந்த நிலையில் மத்திய அரசு, 9-வது மாதம் முதல் 12-வது மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கூடுதல் போலியோ தடுப்பூசி போடும் திட்டத்தையும் அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் கூடுதல் போலியோ தடுப்பூசி திட்டம் நேற்று தொடங்கியது-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 270 துணை சுகாதார நிலையங்கள் மற்றும், 61 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் குறிப்பிட்ட சில அங்கன்வாடி மையங்களுக்கும் மருத்துவர், செவிலியர் அடங்கிய மருத்துவ குழுவினர் அனுப்பபட்டு போலியோ தடுப்பூசி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 832 குழந்தைகளுக்கு கூடுதல் தவணை போலியோ தடுப்பூசி போடப்பட்டன. இனிவரும் காலங்களில், 9 மாதம் முதல் 12 மாதத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கு கூடுதல் போலியோ தவணை தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News