உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி பாரத் பள்ளியில் மகளிர் தினவிழா

Published On 2023-03-09 09:55 GMT   |   Update On 2023-03-09 09:55 GMT
  • மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்.
  • உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு பள்ளியில் ஆசிரியர்கள் அனைவரும் ஒரே சீருடையுடன் விழாவை சிறப்பித்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினராக பாரத் கல்வி குழுமங்களின் நிறுவன தலைவர் மணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில், மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்' என்கிற கோட்பாட்டை அடிகோலிட்டு மகளிர் யாவரும் இவ்வுலகில் அனைத்து துறைகளிலும் விமானம், ராணுவம், மருத்துவம், தொழில்துறை. கல்வித்துறை போன்ற துறைகளில் சாதனை பெற்று வருகின்றனர் என்பதனை எடுத்துக்காட்டுடன் விளக்கினார். பெண்பால் ஆசிரியர்க ளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் பள்ளியில் பணிபுரியும் அனைத்து பெண்பால் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோர்களுக்கு நினைவு பரிசாக கேடயம் வழங்கி பாராட்டினார்.

உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு பள்ளியில் ஆசிரியர்கள் அனைவரும் ஒரே சீருடையுடன் விழாவை சிறப்பித்தனர்.

இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கிருஷ்ணவேணி மணி தலைமை தாங்கினார். மேலும் பாரத் கல்வி குழுமங்களின் செயலர் சந்தோஷ் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். மேலும் பள்ளியின் முதல்வர் விஜயகுமார், துணை முதல்வர் நசீர் பாஷா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். இறுதியில் புனிதா, அனுராதா ஆகியோர் நன்றி கூறினர்.

Tags:    

Similar News