கிருஷ்ணகிரி பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் மாணவி உள்பட 4 பேர் மாயம்
- தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதால் வீட்டில் கண்டித்துள்ளனர்.
- கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்ற சுஹைல் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது ஆசிப்.இவரதுமகன் சுஹைல் (வயது 14). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதால் வீட்டில் கண்டித்துள்ளனர். இதனால் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்ற சுஹைல் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து முகமது ஆசிப் தந்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுவனை தேடி வருகின்றனர்.
இதேபோல ஓசூர் மூக்கண்டப்பள்ளி தேசிங்கு நகரை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் மாயமானார்
.அவரை கடத்தி சென்று விட்டதாக அதே பகுதியை சேர்ந்த பிரபு (24) என்ற வாலிபர் மீது தரப்பட்ட புகாரின்பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல மத்திகிரி பகுதியில் 15 வயது பள்ளி மாணவி ஒருவரும்,மத்தூர் பகுதியில் பிளஸ் 2 மாணவி ஒருவரும் மாயமான தாக தரப்பட்டுள்ள புகார்க ளின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவிகளை தேடி வருகின்றனர்.