உள்ளூர் செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தி விழா

Published On 2023-09-07 15:08 IST   |   Update On 2023-09-07 15:08:00 IST
  • 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதைவேடம் அணிந்து வந்தனர்.
  • வீடுகளில் கிருஷ்ணருக்கு சீடை, முறுக்கு படைத்து வழிபட்டனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ண பகவான் அவதரித்த நாள் கிருஷ்ணஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி பழையபேட்டை கிருஷ்ணர் கோவில், லட்சுமி நாரா யண சாமி கோவில், தர்மராஜா கோவிலில், கிருஷ்ணருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து உற்சவர், பழையபேட்டை, நரசிம்ம சாமி கோவில் தெரு, நேதாஜி சாலை, மகாராஜகடை சாலை வழியாக தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை வேணு கோபால் சாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதைவேடம் அணிந்து வந்தனர். தொடர்ந்து பஜனையை தொடர்ந்து கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்த குழந்தைகள் பூந்தோட்டம் முத்து மாரியம்மன் கோவில் வரை ஊர்வலமாக சென்ற னர்.

இதே போல வீடுகளிலும் கிருஷ்ணஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. வீடுகளில் கிருஷ்ணருக்கு சீடை, முறுக்கு படைத்து வழிபட்டனர். மேலும் குழந் தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பெற் றோர் மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News