கொள்ளிடம் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
கொள்ளிடம் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம்
- மாணவர்களின் நலன் கருதி செங்கல்லால் தரமாக கட்டித்தர வேண்டும்.
- செங்கல்லுக்கு பதிலாக சிமெண்டு கற்கள் வைத்து கட்டப்பட்டு வருகிறது.
சீர்காழி:
சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
ஒன்றிய குழுத் தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார்.
ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
ஒன்றிய குழு துணைத் தலைவர் பானுசேகர் முன்னிலை வகித்தார்.
ஒன்றிய குழு உறுப்பினர்கள் அன்பழகன்,சிவபாலன், அங்குதன்,லட்சுமி பாலமுருகன் உள்ளிட்டோர் தங்களது பகுதி குறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
பாமக உறுப்பினர் அன்பழகன் பேசும்போது கொள்ளிடம் பகுதியில் பிரதான இடங்கள் பலவற்றில் சாலையோரம் குப்பைகள் அள்ளப்படாமல் தேக்கம் அடைந்துள்ளது.
மேலும் மாதிரவேளூர் கிராமத்தில் பள்ளி கட்டடம் செங்கல் இன்றி சிமென்ட் கல்லால் கட்டப்படுவதாக தெரிய வருகிறது. மாணவர்களின் நலன் கருதி செங்களால் தரமாக கட்டவேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய தலைவர் ஜெயபிரகாஷ் கூறும்போது, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் போலீஸ் துணையுடன் உடனடியாக அகற்றப்பட்டு அங்கு ஊராட்சி குப்பைகள் கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் வேட்டங்குடி பள்ளி கட்டிடம் ஒரு மாதத்தில் கட்டப்படும். மாதிரவேளூர் கிராமத்தில் பள்ளி கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் செங்கல்லுக்கு பதிலாக சிமென்ட் கற்கள் வைத்து கட்டப்பட்டு வருகிறது.
அதனை உடனடியாக நிறுத்திவிட்டு செங்கல்லை மட்டுமே பயன்படுத்தி பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஒன்றிய பொறியாளர் பலராமன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஒன்றிய பொறியாளர் பூர்ணசந்திரன் நன்றி கூறினார்.