உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

வருவாய் இழப்பை சரிக்கட்ட கொடைக்கானல் சுங்கச்சாவடியில் 15-ம் தேதி முதல் பாஸ்டேக் நடைமுறை

Published On 2023-09-07 10:20 IST   |   Update On 2023-09-07 10:20:00 IST
  • கொடைக்கானலுக்கு வரும் மற்ற வாகன ஓட்டுனர்களும் உள்ளூர் வாகனம் என தெரிவித்துவிட்டு செல்கின்றனர்.
  • வருகிற 15-ந் தேதி முதல் பாஸ்டேக் முறையில் பணம் வசூலிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் நீர்வீழ்ச்சி அருகே உள்ள சுங்கச்சாவடியில் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் பணம் செலுத்தி வருகின்றனர். இங்கு கொடைக்கானல் பகுதிகளில் உள்ள வாகனங்களுக்கு மட்டும் பணம் வசூலிப்பதில்லை. இந்த நிலையில் கொடைக்கானலுக்கு வரும் மற்ற வாகன ஓட்டுனர்களும் உள்ளூர் வாகனம் என தெரிவித்துவிட்டு செல்கின்றனர். இதனால் சுங்கச்சாவடிக்கு தொடர்ந்து வருமானம் குறைந்து வருகிறது.

இதையடுத்து உள்ளூர் வாகனங்களை தவிர பிற வாகனங்கள் பணம் செலுத்த வசதியாக பாஸ்டேக் நடைமுறையை கொண்டு வரவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கான நடைமுறை பணிகள் முடிந்து வருகிற 15-ந் தேதி முதல் பாஸ்டேக் முறையில் பணம் வசூலிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொடைக்கானல் வாகன உரிமையாளர்கள் தங்களது ஆதார் அட்டை, வாகன உரிமம், வீட்டுவரி உள்ளிட்ட ஆவணங்களை நகராட்சி அதிகாரிகளிடம் கொடுத்து பாஸ் வாகன அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News