உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கொடைக்கானலில் டாக்டர் எனக்கூறி பணம் பறிக்கும் மர்மநபர்

Published On 2022-06-18 11:00 IST   |   Update On 2022-06-18 11:00:00 IST
  • கொடைக்கானலில் டாக்டர் எனக்கூறி பலரிடம் பணம் பறிக்கும் நபர் குறித்து புகார்
  • கொடைக்கானலில் போலி டாக்டர் நடமாட்டம்

கொடைக்கானல்:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா நகராக உள்ளது. இங்கு தலைமை மருத்துவமனையாக அரசு ஆஸ்பத்திரி இருந்து வருகிறது . அண்மைக்காலமாக மொபைல் போன் மூலமாக பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை தொடர்பு கொண்டு பணம் பறிக்கும் நூதன திருட்டு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கொடைக்கானலில் போலியாக அரசு மருத்துவரின் பெயரை கூறி பிரபல ஹோட்டல்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை தொடர்பு கொண்டு குறிப்பிட்ட நபருக்கு கூகுள் பே மூலமாக ரூ. 475 அனுப்புமாறும் கூறுகிறார். தொடர்ந்து மருத்துவர் பேசுவதுபோல் அருகில் இருப்பவர்களிடம் பேசி மோசடியில் ஈடுபட்டு வருகிறார். இவ்வாறாக பணம் கேட்பவர்களிடம் பலரும் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது .

இது குறித்து கொடைக்கானல் ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவர் பொன்ரதியிடம் கேட்டபோது,

ராஜ் என்ற பெயரில் அரசு டாக்டர் இல்லை எனவும் அரசு டாக்டர் பெயரைக் கூறி பணம் கேட்டால் கொடைக்கானல் ேபாலீஸ் நிலையத்தை அணுகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News