அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா
- பட்டமளிப்பு விழாவிற்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் தலைமை வகித்தார்.
- மாணவி ரிதன்யா தலைமையில் அனைவரும் பட்டமளிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவிற்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் தலைமை வகித்தார். அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் சோபா திருமால் முருகன், நிர்வாக அலுவலர் சீனி கணபதி ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வர் லீனா ஜோஸ் ஆண்டறிக்கை வாசித்தார்.
அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி திருமால் முருகன் யுகேஜி முடித்து ஒன்றாம் வகுப்பு செல்லும் 75 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
முன்னதாக மாணவி ஜீவந்திகா வரவேற்புரை ஆற்றினார். மாணவர் எஸ்வந்த் மற்றும் கவினா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
மாணவி ரிதன்யா தலைமையில் அனைவரும் பட்டமளிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பிகேஜி, எல்கேஜி மற்றும் யுகேஜி மாணவர், மாணவியரின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாணவர்கள் சம்ரிதா மற்றும் கவின்யாதவ் ஆகிய இருவரும் நன்றி கூறினர். மழலையர் பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்கள் அனைவரும் பாரத சாரண மாணவர்களின் பேண்ட் இசையுடன் விழா மேடையில் இருந்து ஒன்றாம் வகுப்பிற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஒன்றாம் வகுப்புகளில் ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்களை பூங்கொத்து மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.