கெலமங்கலம் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் தடகளப் போட்டியில் சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு விழா
- தடகள விளையாட்டு போட்டிகள் கெலமங்கலம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
- வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயகோட்டை சரக அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் கெலமங்கலம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் 18- க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 280 -க்கும் மேற்பட்ட மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் காமராஜர் விருது பெற்ற கெலமங்கலம் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மோனிஷா என்ற மாணவி தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களுடன் தனிநபர் சாம்பியன் பட்டத்தையும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தனிநபர் சாம்பியன் பட்டத்தை தேஜாஸ்ரீ என்ற மாணவி வென்றதுடன் பல்வேறு போட்டிகளில் 80-க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர்.
இதற்காக 22-ம் தேதி பள்ளியில் நடந்த பாராட்டு விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர்கள் திம்மப்பா, அனைவரையும் வரவேற்று பேசினார். பட்டதாரி ஆசிரியர்கள் லட்சுமி நாராயா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆஷா பீ, உள்ளாட்சி பிரதிநிதி உமா சுரேஷ் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தின ராக கெலமங்கலம் தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் தேவராஜ் மற்றும் தொழிலதிபர் ராம் தேவ் என்கிற குமன்ராம் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர்.
இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் கவிதா நன்றி கூறினார்.