உள்ளூர் செய்திகள்

மாவிளக்கு ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம்.

சேலம் ஜான்சன்பேட்டை காவேரி மாரியம்மன் கோவில் விழாவையொட்டி மாவிளக்கு ஊர்வலம்

Published On 2023-03-08 15:23 IST   |   Update On 2023-03-08 15:23:00 IST
  • சேலம் ஜான்சன்பேட்டை காவேரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
  • தொடர்ந்து கோவில் விழா நேற்று மாவிளக்கு பூஜையுடன் தொடங்கியது.

சேலம்:

சேலம் ஜான்சன்பேட்டை காவேரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. தொடர்ந்து கோவில் விழா நேற்று மாவிளக்கு பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து ஜான்சன்பேட்டை பக்தர்கள் திரளானவர்கள் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வந்தனர். பின்னர் கோவிலில் பூஜை செய்யப்பட்டது. அதன்பிறகு மேளதாளம், ஆட்டம், பாட்டத்துடன் மாவிளக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை ஜான்சன்பேட்டை காவேரி மாரியம்மன் நண்பர்கள் குழு தலைவர் தேவதாஸ், செயலாளர் சண்முகவேல், பொருளாளர் ஏழுமலை, துணை செயலாளர்கள் கரிகாலன், பழனி, சிலம்பரசன், மோகன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News