அன்னை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம்
- நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் அன்னை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம்
- 100 மாணவிகள் கலந்து கொண்டு 740 கிலோ எடை கொண்ட குப்பைகளை அகற்றினார்கள்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம்- காகித ஆலை செல்லும் சாலையில் உள்ள அன்னை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கரூர் மாநகராட்சி இணைந்து நடத்திய தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. அதில் அன்னை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலிருந்து 100 மாணவிகள் கலந்து கொண்டு 740 கிலோ எடை கொண்ட குப்பைகளை அகற்றினார்கள். இந்நிகழ்வில் கரூர் மாவட்ட மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு பற்றி எடுத்துக் கூறினார்.மேலும் மாணவிகளுக்கு தூய்மை பற்றிய உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.இதில் துணை ஆய்வாளர்கள் ராஜா, கோபாலகிருஷ்ணன், மதிவாணன், சுகாதார அலுவலர் லட்சியவர்மா, பொது சுகாதார குழுவின் தலைவர் பசுவை சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுப்ஸ்ஸ்ரீ, பாரதி, வெளி நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் சுரேகா, ஜீவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.