மெக்கானிக்கல் என்ஜினியரிங் சங்கத்தின் தொடக்க விழா
வேலாயுதம் பாளையம்,
கரூர் எம்.குமாரசாமி என்ஜீனியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் சங்கத்தின் தொடக்க விழா சர்.சி.வி.ராமன் அரங்கத்தில் நடைபெற்றது.
துறைத் தலைவர் மோகன்பிரசாத் வரவேற்றார். கரூர் எம்.குமாரசாமி என்ஜீனியரிங் கல்லூரி செயலாளர் கே.ராமகிருஷ்ணன் தலைமையுரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் பி.எஸ்.முருகன், சிறப்புரை யாற்றினார். சிறப்பு விருந்தினராக, சென்னை எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட். லிமிடெட் திட்டம் மற்றும் திட்டமிடல் தலைவர் இளங்கோ கலந்து கொண்டு மெக்கானிக்கல் என்ஜீனியரிங் சங்க விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.பின்னர் எலக்ட்ரிக் வாகனம் 2025 மற்றும் அதன் பாரத் ஸ்டேஜ் விதிமுறைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.சங்க ஆலோசகர் வினோத்குமார், 2023-24 கல்வியாண்டின் சங்க அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் தற்காலிக செயல்பாடுகளை அறிவித்தார். முடிவில் சங்க செயலாளரும் , இறுதியாண்டு பி.இ. மெக்கானிக்கல் என்ஜீனியரிங் மாணவருமான பாலமுருகன் நன்றி கூறினார் .