உள்ளூர் செய்திகள்

மது விற்பனை செய்த 3 பேர் கைது

Published On 2023-09-30 11:59 IST   |   Update On 2023-09-30 11:59:00 IST
மரவாபாளையம் பகுதியில் மது விற்பனை செய்த 3 பேர் கைது

வேலாயுதம்பாளையம்,  

கரூர் மாவட்டம் மரவாபாளையம் அரசு மதுபான கடை அருகே ஒருவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்துக் கொண்டு திருட்டுத்தனமாக அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று, மது விற்பனையில் ஈடுபட்ட நொய்யல் பகுதியைச் சேர்ந்த மகுடேஸ்வரன (வயது 49) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் காந்தி நகர் பகுதியில் மதுப்பாட்டில்களை விற்பனை செய்த தண்டபாணி (55)என்பவரை கைது செய்து அவரிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 5 மதுப் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் தளவா பாளையம் கடைவீதி பகுதியில் மது பாட்டில்களை விற்பனை செய்த தளவாபாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகம்( 54) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News