உள்ளூர் செய்திகள்

ஜார்கண்ட் மாநில வாலிபர் பலி

Published On 2023-08-22 13:54 IST   |   Update On 2023-08-22 13:54:00 IST
அரவக்குறிச்சியில் பஸ் மோதி ஜார்கண்ட் மாநில வாலிபர் பலி

கரூர்,

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சம்ரு என்பவரின் மகன் மிதுன் (வயது 24). இவர் அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே கட்டப்பட்டு வரும் தனியார் மருத்துவமனை கட்டட வேலைக்காக, ஒரு மாதத்திற்கு முன்பு அரவக்குறிச்சி வந்தார். வேலை முடிந்ததால், ஜார்கண்ட் செல்வதற்காக சம்பளம் வாங்கிக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, மதுரையிலிருந்து பெங்களூரு செல்லும் தனியார் பஸ் அவர் மீது மோதியது. அருகில் இருந்தவர்கள் மிதுனை மீட்டு, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர். தன் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வமுடன் இருந்த, வட மாநில இளைஞர் பஸ் மோதி இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News