உள்ளூர் செய்திகள்

மகளிர் கல்லூரியில் உலக தாய்ப்பால் தினவிழா

Published On 2023-08-03 13:11 IST   |   Update On 2023-08-03 13:11:00 IST
  • கரூர் வேளாளர் மகளிர் கல்லூரியில் உலக தாய்ப்பால் தினவிழா நடைபெற்றது
  • தாய்ப்பால் கொடையாளர் கௌசல்யா அருண்குமார் பங்கேற்பு

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே உப்புப்பாளையத்தில் செயல்பட்டு வரும் கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சியை கல்லூரின் தலைவர் ராஜேஸ்வரி கதிர்வேல் தொடங்கி வைத்தார். கல்லூரின் அறக்கட்டளை உறுப்பினர் பிரீத்தி கவுதமன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் மனோ சாமுவேல் தலைமை வகித்தார்.இவ்விழாவிற்கு சான்றிதழ் பெற்ற தாய்பால் ஆலோசகர் மற்றும் ஆதினி தாய்ப்பால் தான நிறுவனர் கௌசல்யா அருண்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்தும், நன்மைகள் குறித்தும் மாணவிகளிடையே கலந்துரையாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் 300- க்கும்மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News