உள்ளூர் செய்திகள்

குழம்பில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாப பலி

Published On 2023-08-20 09:06 IST   |   Update On 2023-08-20 09:06:00 IST
  • கோயில் அன்னதான நிகழ்ச்சியில் குழம்பில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்
  • உடலை கைப்பற்றி தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்

கரூர், 

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள பள்ளக்காடு பகுதி அம்மாசி தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் மகன் பார்த்திபன் (வயது24) இவர் சென்ட்ரிங் கூலி வேலை செய்து வந்து உள்ளார். இவர் கடந்த 13ம் தேதி அன்று கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்.டி.மலை பகுதியில் உள்ள கரையூரான் நீலமேகம் கோயிலில் நடந்த ஆடி 28-ம் நாள் பூஜையில் கலந்து கொண்டார். பின்னர் பார்த்திபன் கோயிலில் நடந்து கொண்டு இருந்த அன்னதான பந்தலுக்கு சென்று அன்னதானம் பரிமாறும் வேலையை செய்து கொண்டு இருந்தார். அப்போது சாதம் எடுப்பதற்காக பார்த்திபன் சென்றார். அங்கு சாதத்தை எடுத்து கொண்டு செல்லும் போது பார்த்திபன் நிலை தடுமாறி அருகில் இருந்த குழம்பு அண்டாவில் விழுந்தார்.உடனடியாக அருகில் இருந்த இளைஞர்கள் பார்த்திபனை தூக்கில் வெளியில் கொண்டு வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து பார்த்திபனின் தந்தை ரவிக்குமார் தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிந்த தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். பார்த்திபனுக்கு திருமணம் ஆகி மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

Tags:    

Similar News