உள்ளூர் செய்திகள்
டிராக்டர் ஏறி இறங்கியதில் தொழிலாளி பலி
- குளித்தலை அருகே டிராக்டர் ஏறி இறங்கியதில் தொழிலாளி பரிதாபமாக பலியானார்
- தோகைமலை போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணை
கரூர்,
குளித்தலை அடுத்த, நல்லுார் பஞ்சாயத்து, கொன்னாச்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பரிமணம் (வயது 65). இவரது மனைவி வெள்ளையம்மாள் (42) இருவரும் கரும்பு வெட்டும் தொழிலாளிகள். பரிமணம், ராக்கம்பட்டி-வீராச்சாமி தோட்டம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, முதலிகவுண்டனுாரை சேர்ந்த விஜய் என்பவர், டிராக்டரை ஓட்டி வந்தார். அவர் டிராக்டரை பின்னோக்கி ஓட்டிய போது, பரிமணம் மீது டிராக்டர் ஏறி, இறங்கியது. இதில் சம்பவ இடத்தி உடல் நசுங்கி பரிமணம் உயிரிழந்தார். தோகைமலை போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.