உள்ளூர் செய்திகள்

சிந்தனை முற்றம் நிகழ்ச்சி

Published On 2022-11-21 12:03 IST   |   Update On 2022-11-21 12:03:00 IST
  • சிந்தனை முற்றம் நிகழ்ச்சி நடந்தது
  • நூலக வாசகர் வட்டம் சார்பில்

கரூர்:

கரூர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் தலைவர் சங்கர் தலைமையில் 45-வது சிந்தனை முற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகிழ்வித்து மகிழ் என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம் பேசினார். அப்போது, பள்ளி பருவத்தில் இருந்து புத்தகம் வாசிப்பு முக்கியம். அதன் மூலம் உலக விஷயங்களை கற்றுக்கொண்டு மற்றவர்கள் மத்தியில் தெளிவாக உண்மையாக பேச முடியும். அறிஞர்கள் புத்தகம் வாசிக்காத நாலே இல்லை என்று சொல்லலாம். தமிழ் சமுதாயத்தில் வழக்கத்தில் குறைந்து வரும் பழக்கவழக்கங்கள் புத்தக வடிவில் உள்ளன. அதையெல்லாம் இன்றைய தலைமுறையினர் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

பெண் குழந்தைகள் பிறப்பது வரம். அவர்களை தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும். மகள் பிறந்து விட்டால், மகாலட்சுமி பிறந்து விட்டதாக கூறிய முன்னோர்கள், மகன் பிறக்கும் போது மகாவிஷ்ணு பிறந்து விட்டதாக கூறவில்லை. பெண் குழந்தைகளின் பிறப்பு தெய்வீகமானது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட மைய நூலக அலுவலர் சரவணகுமார், மைய நூலகர் சிவக்குமார், வாசகர் வட்ட நெறியாளர் சிவக்குமார், திருக்குறள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ரமேஷ், பட்டதாரி ஆசிரியர் முரளி உள் பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News