உள்ளூர் செய்திகள்
கரூரில் நாட்டு கோழி விலை குறைந்தது
- புரட்டாசி மாதம் தொடங்கியதால் கரூரில் நாட்டு கோழி விலை குறைந்தது
- நாட்டுக்கோழி விலை குறைவாக கிடைப்பதால், பலர் உயிர் கோழிகளை வாங்கி செல்கின்றனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், தளவாபாளையம், தோட்டகுறிச்சி, மேட்டுப்பாளையம், கடம்பன்குறிச்சி, நன்னியூர் புதூர், வாங்கல், பாலத்துறை, தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூர், நொய்யல், புன்னம்சத்திரம் பகுதிகளிலும், வாரச்சந்தைகளிலும் நாட்டு கோழி விற்பனை செய்யப்படுகிறது.கடந்த வாரம் வரை ஒரு கிலோ நாட்டுக் கோழி, ரூ.350 வரை விற்பனையானது. ஆனால், நேற்று 300 ரூபாய்க்கு விற்பனையானது. புரட்டாசி மாதம் தொடங்கியதன் காரணத்தால் இந்த விலை சரிவு ஏற்பட்டு உள்ளது.இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பெரும்பாலான பொதுமக்கள் அசைவத்தை விரும்புவதில்லை. இதனால் நாட்டுக்கோழிகள் விலை சரிந்துள்ளது. ஆனால், நாட்டுக்கோழி விலை குறைவாக கிடைப்பதால், பலர் உயிர் கோழிகளை வாங்கி செல்கின்றனர்.