உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

Published On 2023-08-05 12:35 IST   |   Update On 2023-08-05 12:35:00 IST
  • இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு
  • செயின் பறித்து சென்ற மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம் புகளூர் மேத்யூநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (67). இவர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி லலிதா (60). கணவன், மனைவி இருவரும் ஸ்கூட்டரில் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை புகளூர் அருகே மூலிமங்கலம் பிரிவு அருகே உள்ள புனித அந்தோணியார் ஆலயம் அருகே வந்து கொண்டிருந்தபோது இவர்களுக்கு பின்னால் பைக்கில் ெஹல்மெட் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் கிருஷ்ணவேணி அணிந்திருந்த 6 பவுன் தங்க தாலிக்கொடியை அறுத்துள்ளனர். அப்போது நிலை தடுமாறி கிருஷ்ணசாமியும், லலிதாவும் தேசிய நெடுஞ்சாலையின் தார் சாலையில் விழுந்தனர். அப்போது மர்ம நபர்கள் தங்க தாலிக்கொடியை பிடித்து இழுத்தனர். அப்போது லலிதா தாலிக்கொடியை கையில் இறுக்கமாக பிடித்துக் கொண்டார். தாலி செயின் அறுந்து ஒன்றரை பவுன் தாலி செயின் மர்ம நபர் கையில் சிக்கியது. அந்த நேரத்தில் சாலையில் வாகனங்களில் வருபவர்களை பார்த்து கையில் கிடைத்த ஒன்றை பவுன் தாலி கொடியுடன் இரண்டு மர்மநபர்களும் மோட்டார் பைக்கில் தப்பி சென்று விட்டனர். இது குறித்து லலிதா வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்கு பதிவு செய்து லலிதாவின் தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடிய 2 மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளபுனித அந்தோணியர் தேவாலயம் அருகே 2 வாகனங்களில் வந்த மாமியார் மருமகள் ஆகிய 2 பெண்களிடமும் 4 ½ பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு இதேபோல் இரண்டு மரமநபர்கள் மோட்டார் பைக்கில் தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News