உள்ளூர் செய்திகள்

இடைநிற்றல் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆய்வு

Published On 2023-10-05 12:18 IST   |   Update On 2023-10-05 12:18:00 IST
  • புகழூரில் இடைநிற்றல் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
  • புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமையிலான குழுவினர் புகழுர் முழுவதும் ஆய்வு

வேலாயுதம் பாளையம், 

கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமையிலான குழுவினர் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, "பள்ளிக்கூடம் மணி அடிச்சாச்சு பள்ளிக்கு வாங்க" என்ற திட்டத்தின் கீழ், பள்ளியில் இடைநின்ற மாணவ, மாணவிகளை பள்ளியில் சேர்த்தல் மற்றும் புதிய சேர்க்கை தொடர்பாக,பெற்றோர்களிடம் கல்வி கற்றல் பெருமை குறித்தும், மாணவ, மாணவிகளுக்கான தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்தும், எடுத்துரைத்து தங்களது குழந்தைகளை கல்வி கற்றலை தொடர வேண்டி விழிப்புணர்வு மேற்கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் செந்தில், மூலிமங்கலம் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நகராட்சி நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News