உள்ளூர் செய்திகள்

வேலாயுதம்பாளையத்தில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷகேம்

Published On 2023-05-13 12:32 IST   |   Update On 2023-05-13 12:32:00 IST
  • வேலாயுதம்பாளையத்தில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷகேம் நடைபெற்றது
  • தேன், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

கரூர்,

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் நன்செய் புகளூரில் உள்ள பாகவல்லி அம்பிகை சமேத மேக பாலீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

அதேபோல் புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள காலபைரவர், திருக்காடு துறை மாதேஸ்வரி அம்பிகை உட னுறை மாதேஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர், குந்தாணி பாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் சிவன் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Tags:    

Similar News