உள்ளூர் செய்திகள்
போன் தர மறுத்த வியாபாரிக்கு கத்தி குத்து
- போன் தர மறுத்த வியாபாரியை கத்தியால் குத்தினர்
- பணத்தையும் பறித்து சென்றனர்
கரூர்:
கரூர் டி. செல்லாண்டிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 50) வியாபாரியான இவர், சம்பவத்தன்று காமராஜ் மார்க்கெட்டில், காய்கறிகளை வாங்கிக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் மக்கள் பாதை ரவுண்டானா வழியாக வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார்.அப்போது, மோகன்ராஜ் (22), உதயபிரகாஷ் (21), ஹேமல் (20), சஞ்சய்குமார் (20), ஆகிய நான்கு பேர், செந்தில் குமாரை வழிமறித்து மொபைல் போனை கேட்டுள்ளனர். அவர் மொபைல் போனை தர மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த நான்கு பேரும், செந்தில் குமாரை கத்தியால் குத்தினர். பின், செந்தில் குமாரிடமிருந்து மொபைல் போன் மற்றும் 1,200 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினர். காயம்டைந்த செந்தில்குமார், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, கரூர் டவுன் போலீசார் மூன்று பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.