உள்ளூர் செய்திகள்

புங்கோடை குளத்துபாளையம் வாலிபர் மாயம்

Published On 2023-08-20 08:45 IST   |   Update On 2023-08-20 08:45:00 IST
  • கொல்லிமலைக்கு பைக்கில் சென்ற புங்கோடை குளத்துபாளையம் வாலிபர் மாயம்
  • வழக்கு பதிந்து வேலாயும்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே புங்கோடை குளத்துபாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (49), கூலித்தொழிலாளியான இவரது மகன் மோகன்ராஜ் (22). இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இஎம்இ படித்துவிட்டு தற்பொழுது ஒரு தனியார் ஐஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். மோகன்ராஜ் தனது மோட்டார் பைக்கில் கொல்லிமலைக்கு மோட்டார் பைக்கில் சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லிமலைக்கு சென்று பல்வேறு இடங்களில் மோகன் ராஜை தேடிப் பார்த்தும் பலனில்லை. மோகன்ராஜ் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து ராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News