குளித்தலை பகுதிகளில் 7 இடங்களில் புதிய மின் மாற்றிகள்
- குளித்தலை பகுதிகளில் 7 இடங்களில் புதிய மின் மாற்றிகள் தொடங்கப்பட்டுள்ளது
- எம்.எல்.ஏ. இரா.மாணிக்கம் தொடங்கி வைத்தார்
குளித்தலை,
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரம் ஊராட்சிக்குட்பட்ட தண்ணீர்பள்ளி, கருங்களாப்பள்ளி, ஈச்சம்பள்ளம், கூடலூர் பாலம், சூரியனூர், கவுண்டம்பட்டி ஆகிய 7 இடங்களில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமை வகித்து புதிய மின்மாற்றுகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தியாகராஜன், குளித்தலை மின்வாரிய செயற்பொறியாளர் (பொ) ஆனந்த், உதவி செயற்பொறியாளர் பாலகுமார், உதவி பொறியாளர் நடராஜன், நங்கவரம் பேரூராட்சி துணைத் தலைவர் அன்பழகன், இராஜேந்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ரெத்தினவள்ளி சண்முகம், மின்வாரிய அலுவலர் கோபால், பரளி செந்தில் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.