உள்ளூர் செய்திகள்

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

Published On 2023-01-23 06:07 GMT   |   Update On 2023-01-23 06:07 GMT
  • மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
  • முந்தைய ஆண்டை விட, கடந்த ஆண்டு சாலை விபத்து உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு, குறைக்கப்பட்டுள்ளது.

கரூர்:

கரூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில், எஸ்.பி.சுந்தரவதனம் கலந்து கொண்டு பேசியதாவது:கரூர் மாவட்டத்தில், கடந்த 2021ல், 20 கொலை வழக்குகளும், 2022ல், 14 கொலை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2021ல், 393 விபத்துகளில், 413 பேர் உயிரிழந்த நிலையில், 2022ல், 368 விபத்துகளில், 377 பேர் உயிரிழந்துள்ளனர்.

முந்தைய ஆண்டை விட, கடந்த ஆண்டு சாலை விபத்து உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு, குறைக்கப்பட்டுள்ளது.நடப்பாண்டு வாகன சோதனை செய்து சாலை விபத்துகளை தடுக்க வேண்டும். மேலும், குற்ற செயல்களான சூதாட்டம், லாட்டரி, கஞ்சா, குட்கா, சட்ட விரோத மதுவிற்பனை ஆகியவற்றை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், ஏ.டி.எஸ். பி. கண்ணன், டி.எஸ்.பி.க்கள் தேவராஜ், முத்தமிழ் செல்வன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.முன்னதாக, கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், காவல் துறை வாகனங்கள் முறையாக பரா மரிக்கப்படுகிறதா என எஸ்.பி., சுந்தரவதனம் ஆய்வு செய்தார்.




Tags:    

Similar News