உள்ளூர் செய்திகள்
குளித்தலை நகராட்சி ஓட்டுநருக்கு பதக்கம்
- சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணிபுரிந்த குளித்தலை நகராட்சி ஓட்டுநருக்கு பதக்கம் வழங்கப்பட்டது
- பதக்கத்தை நகர்மன்ற தலைவர் வழங்கினார்
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக 77 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு குளித்தலை நகராட்சி ஓட்டுனராக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய நகராட்சி ஓட்டுநர்கள் வீரக்குமார், கருப்பண்ணன் ஆகியோர்களின் பணியினை பாராட்டி நகராட்சிகளின் ஆணையரின் உத்தரவுப்படி தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை ஓட்டுனர் வீரக்குமாரிடம் குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவிராஜா வழங்கினார்.நிகழ்ச்சியில் முன்னாள் நகர் மன்ற தலைவர் மற்றும் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவிராஜா, நகராட்சி ஆணையர் பொறுப்பு மனோகரன் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள், நகர்மன்ற அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.