உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் புகளூர், மண்மங்கலம் வட்ட பேரவை கூட்டம்

Published On 2023-07-01 13:02 IST   |   Update On 2023-07-01 13:02:00 IST
  • தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் புகளூர், மண்மங்கலம் வட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது
  • இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

வேலாயுதம் பாளையம்,

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் புகளூர், மண்மங்கலம் வட்ட பேரவை கூட்டம் புகளூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தனலட்சுமி தலைமை வகித்தார்.முருகையன் வரவேற்றார் . மாவட்ட தலைவர் கருணாகரன் துவக்க உரை ஆற்றினார்.சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சிங்கராயர்,மாவட்ட துணைதலைவர்( டிஎன்ஜிஇஏ) குப்புசாமி, மாவட்ட மகளிர் ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்க லட்சுமி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் விஜயகுமார் ஆகியோர்சிறப்புரை ஆற்றினார்கள்.முடிவில் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது.வட்ட தலைவராக (வருவாய்த்துறை) உமா மகேஸ்வரன், வட்ட செயலாளராக (நெடுஞ்சாலைத்துறை) முருகையன், வட்ட பொருளாளர்( வருவாய்த்துறை) இளவரசி, தேர்ந்தெடுக்கப்பட்டனர். பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். மண்மங்கலம் ,புகளூர் தாலுகாக்களில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு, மாவட்ட மையம் அமைத்து தர வேண்டும்.புகளூர் ,மண்மங்கலம் தாசில்தார்களை சந்திக்க வரும் பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Tags:    

Similar News